ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படிப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் கலந்து கொண்டார். அப்போது படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் படப்பிடிப்பு உடனே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறிய ரஜினிகாந்த் தனியார் ஹோட்டலில் தங்கினார். இதையடுத்து மறுநாள் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்வோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொரோனா அறிகுறி இல்லை என்று அறிக்கை வெளியிட்டனர். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக அவரது சகோதரர் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி இருப்பதால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தங்கில் சில நாட்கள் ரஜினி ஓய்வெடுக்க உள்ளதாகவும் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.