ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் லக்ஷ்மண் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பூமி’. விவசாயத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் விவசாயம் செய்யும் ஹீரோவாகவே நடித்துள்ளார் ஜெயம் ரவி. இந்த படத்தில் புதுமுகம் நிதி அகர்வால் நாயகியாகவும், சதீஷ் நண்பர் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இமான் இசையமத்துள்ளார்.
சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற பல பிரபல இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய டுட்லீ இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். விவசாயத்தை மையமாக கொண்டு சமூக கருத்து பேசும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயம் ரவியின் 25 ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படம் லாக்டவுன் இல்லை என்றால் மே மாதமே ரிலிஸாகி இருக்கும்.
தற்போது ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படம் பொங்கலன்று அதாவது ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான டீஸர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்திலிருந்து ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.