V4UMEDIA
HomeNewsKollywoodசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அப்டேட் !!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அப்டேட் !!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இப்போது டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்த் ’அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் அந்த படப்பிடிப்பின்போது படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.
இதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் ரஜினிகாந்த் தனிமைப் படுத்திக் கொண்டார். இந்நிலையில் ரஜினிகாந்துக்கு திடீரென ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் அவர் அங்கு உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், ரத்த அழுத்தம் சீராகும் பட்சத்தில் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.4

Image

Most Popular

Recent Comments