தமிழ் சினிமாவில் திறமையான இயக்குநர்களில் ஒருவர் அஜய் ஞானமுத்து. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய மெகாஹிட் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அஜய் ஞானமுத்து தற்போது சியான் விக்ரம் அவர்களை வைத்து “கோப்ரா” படத்தினை இயக்கியுள்ளார்.
சியான் விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்டுள்ள இந்த கடினமான நேரத்தில், தயாரிப்பாளர்களின் சுமையை குறைக்கும் விதமாக கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சம்பளத்தில் 40% குறைத்து கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் விஜயதசமி திருநாளான (அக்டோபர் 26) கோப்ரா படத்தின் டப்பிங் வேலைகள் துவங்கப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு விலக்கப்பட்ட நிலையில் கோப்ரா படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோப்ரா படத்தின் (இரண்டாம்) செக்கெண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது தற்போது சமுக வலைத்தளங்களில் மிக வைரலாகி வருகிறது.