V4UMEDIA
HomeNewsMollywoodபிரபல இயக்குனர் மூளைச்சாவு !! சோகத்தில் ரசிகர்கள் !!!

பிரபல இயக்குனர் மூளைச்சாவு !! சோகத்தில் ரசிகர்கள் !!!

சமீபத்தில் மலையாள சினிமாவில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த “சூஃபியும் சுஜாதையும்” படத்தை இயக்கிய இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்துள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் ஷாநவாஸ். பின்னர் இவர் கரி மற்றும் சூஃபியும் சுஜாதையும் என இரண்டு படங்களை இயக்கினார். கடைசியாக அவர் இயக்கிய சூஃபியும் சுஜாதையும் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனிப்பைப் பெற்றது. குறிப்பாக அதிதி ராவ் நடிப்பு திறமையை அனைவரும் பாராட்டினார்.

Image

இதையடுத்து ஷாநவாஸ் தனது அடுத்த படத்தின் கதை எழுதும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  அதையடுத்து அவருக்கு கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பு அறிவித்துள்ளது.

4 மணி நேரத்தில் கடக்க வேண்டிய கோவை – கொச்சி சாலையை போலீஸ் உதவியுடன் வெறும் 1மணி 30 நிமிடத்தில் கடந்துள்ளனர். அவரது மறைவு செய்தியை கேட்டு ரசிகர்கள் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Most Popular

Recent Comments