V4UMEDIA
HomeNewsKollywoodசூப்பர்ஸ்டார் ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். அவருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.

அவர் தற்போது, அண்ணாத்த படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். அவருடன் கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட நடிகைகளும் நடித்து வந்த நிலையில் கொரோனா கால ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு மீண்டும் கடந்த வாரம் ஹைதராபாத்தில் பலத்த பாதுகாப்புடன் துவங்கப்பட்டது.

இந்நிலையில், அண்ணாத்த ஷூட்டிங்கில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவசர அவசரமாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.

ரஜினி அவர்களுக்கு தொற்றில்லை என்பது உறுதியாகியுள்ளது. அவர் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Most Popular

Recent Comments