தமிழ், தெலுங்கு, கன்னட என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தானா. தற்போது பாலிவுட்டில் அறிமுகம் ஆகவுள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த இரண்டு படங்களுக்கும் மாபெரும் வெற்றி பெற்று மொழி எல்லையை தாண்டி மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.இப்போது கார்த்தியுடன் சுல்தான் படத்திலும், அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட்டில் அறிமுகம் ஆகவுள்ளார். சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் மிஷன் மஞ்சு படத்தில் நாயகியாக ராஷ்மிகா ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தானில் நடத்திய ரா மிஷன் குறித்த கதையாக இப்படம் தயாராக உள்ளது.இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகியுள்ளது. ராஷ்மிகா பாலிவுட் படத்தில் நடிப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் #RashmikaMandanna என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.