Home News Kollywood கர்ணன் படத்தலைப்புக்கு எதிர்ப்பு !! தனுஷிற்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள் !

கர்ணன் படத்தலைப்புக்கு எதிர்ப்பு !! தனுஷிற்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள் !

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன் நடித்துள்ள படம் ‘கர்ணன்’. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. இப்படத்திற்கு சிவாஜி நலப்பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனுஷிற்கு அவர்கள் வெளியிட்டுள் அறிக்கையில், ”கர்ணன் என்றாலே சிவாஜி நடித்த கர்ணன் படம் தான் நினைவுக்கு வரும். சட்டப்படி ஒரு படத்தின் உரிமையை பெற்று, மற்றொரு படத்திற்கு நியாயம் என்றாலும் இதை தவிர்ப்பது நல்லது. கர்ணன் என்றாலே கொடுப்பவன். ஆனால் உங்கள் படத்தில் உரிமைக்காகப் போராடும் ஒருவன் என குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு சமூகத் படத்திற்கு ‘கர்ணன்’ என்று பெயர் வைப்பது ஏற்கத்தக்கதல்ல. இது சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் மனதையும் புண்படுத்தும். எனவே பட தலைப்பை மாற்றும்படி கோரிக்கை வைக்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் இந்திய அளவில் #கர்ணன்DHANUSH எனும் ஹாஸ்டாகில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .