Home News Kollywood “அந்தாதூன்” தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சிம்ரன் !!

“அந்தாதூன்” தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சிம்ரன் !!

2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளிவந்த அந்தாதூன் திரைப்படம் இந்தியாளவில் மட்டுமின்றி உலக அளவில் மிக பெரிய கவனம் ஈர்த்தது. இதனை தொடர்ந்து அந்த படத்தை இந்தியாவின் மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய மிகப்பெரிய போட்டி நிலவ, தமிழ் பதிப்பை தியாகராஜன் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றினார்.

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை தபு நடித்திருந்தார். கதாநாயகனுக்கு இணையான வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த தபுவின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

Image

இந்நிலையில் இந்த படத்தின் ரீமேக்கில் தபுவின் கதாபாத்திரத்தில் நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், பிரபல முன்னணி நடிகை சிம்ரன் நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார். பிரஷாந்த் சிம்ரன் கூட்டணி ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.