நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான “ரெளடி பிக்சர்ஸ்” திரைப்பட விநியோகம் செய்ய தொடங்கியுள்ளது.
தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி கதாநாயகனாக களம் இறங்கும் திரைப்படம் “ராக்கி”. பாரதிராஜா இந்தப் படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அருண் மாத்தேஸ்வரன் எழுதி இயக்கத்தில், ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். படம் வெளிவரும் முன்னே இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன் தனது படத்தை தொடங்கிவிட்டார். சாணி காகிதம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் மற்றும் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கிறார்கள்.
இதைக் குறித்து விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில், “உதவி இயக்குநராக இருந்து தற்போது இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்குவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் நானும், நயன்தராவும் இணைந்து இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்” என பதிவிட்டுள்ளார்.