செவேன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்து வருகிறார்.
‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுயோஸ் லலித் குமார் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ என 2 படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளனர்.
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 10) தொடங்கியுள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட பூஜையில் விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி கலந்துகொண்டனர். இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் சமந்தா நடிக்கவுள்ளார். நயன்தாரா மற்றும் அனிருத் இந்த பூஜையில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது