சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரின் படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நாளை முக்கிய அப்டேட்டை வெளியிடுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. நடிகர் ரஜினி சட்டமன்ற தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிட இருப்பதால் அண்ணாத்த பட பணிகளை ஜனவரி மாதத்துக்குள் விரைவாக முடிக்க முயற்சி செய்து வருகிறார்.
நடிகர் விஜய்யின் தலைப்பு அறிவிக்கப்படாத 65வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக முன்னதாகவே செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தற்போது டிவிட்டரில் பதிவிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளது, அதில் மெகா அறிவிப்பு என்று தலைப்பிட்டு கீழே நாட்கள் மற்றும் மணி நேரங்கள் ஓடுகிறது.
அந்த வீடியோவில் இன்று, நாளை, ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 31 ஆகிய நாட்கள் காட்டப்படுகின்றன. இதனால் இந்த அறிவிப்பு ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் குறித்ததா? அல்லது விஜய்யின் 65வது படம் குறித்ததா? இல்லை நடிகர் தனுஷ் படம் குறித்தா ? இல்லை சூர்யா படம் குறித்தா ? என ரசிகர்கள் தங்களுக்குள் போட்டி போட்டு விவாதித்து வருகின்றனர்.