யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கிய (KGF) கே.ஜி.எப் திரைப்படம் கன்னட திரை உலகின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. கன்னட மொழி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கே.ஜி.எப் – 2 படத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் சஞ்சய் தத் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற வெளிநாடு சென்றுள்ளார். சஞ்சய் தத் க்கு பதிலாக யார் நடிப்பார் என ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.
பெங்களூரில் கடந்த மாதம் துவங்கிய படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்தார். ஆனால் பிரகாஷ் ராஜ் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என சரியான தகவல் வெளியாகவில்லை.
இப்போது இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல் முறையாக படத்தின் கதாநாயகன் யாஷின் புகைப்படத்தை நேற்று வெளியிட்டுள்ளனர். மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் யாஷின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது.