V4UMEDIA
HomeNewsKollywoodதமிழ் சினிமாவில் தளபதி விஜய்யின் 28 ஆண்டுகள் !

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யின் 28 ஆண்டுகள் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி முடிசூடா மன்னனாக வலம் வருகிறார் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமாவில் கால் பதித்து இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகின்றன. உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய் இன்று டிசம்பர் 4ம் தேதியுடன் நடிக்க வந்து 28 ஆண்டுகள் ஆகப்போகிறது. இளைய தளபதி ஆக அறிமுகமாகி இன்று தளபதி விஜய் ஆக வலம் வருகிறார்.

தளபதி விஜய்யின் 28 ஆண்டுகளை முன்னிட்டு காமன் டிபியை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் வெளியிட்டுள்ளனர்.

Image

பூவே உனக்காக, லவ் டுடே, ஓன்ஸ் மோர், காதலுக்கு மரியாதை, நினைந்தேன் வந்தாய், பிரியமுடன், துள்ளதா மனமும் துள்ளும், குஷி, பிரின்ட்ஸ், பத்ரி, திருமலை, கில்லி, சிவகாசி, திருப்பாச்சி, போக்கிரி, நண்பன், வேலாயுதம், காவலன், துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல், பிகில் என பல மெகா ஹிட் படங்களை கொடுத்து நம்பர்.1 இடத்தில் உள்ளார். தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். உலகம் முழுவதும் வசூலை வாரி குவிக்கிறார்.

Image

இந்நிலையில் இதைக்கொண்டாடும் விதமாக #28YearsOfVIJAYISM என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டுவிட்டரில் உலக அளவில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். மேலும் மாஸ்டர் என்று ஹேஸ்டேக் பதிவிட்டும் இந்திய அளவில் தளபதி விஜய்யின் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
வரும் 2021ம் ஆண்டு ஜனவரியில் பொங்கலுக்கு தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Most Popular

Recent Comments