வரும் சட்டப்பேரவை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மக்கள் நீதி மய்யம் கட்சியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது, அவர் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் .
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் , எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், “அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்பேனா?, ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும்,” எனத் தெரிவித்தார்.
