V4UMEDIA
HomeNewsKollywoodதனிமைப்படுத்தி கொண்ட நடிகர் சிவக்குமார் !!

தனிமைப்படுத்தி கொண்ட நடிகர் சிவக்குமார் !!

நடிகர் சிவக்குமார் தனது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிவகுமார் 1980களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

நடிகர்கள் கார்த்தி மற்றும் சூர்யாவின் தந்தையும், முன்னாள் நடிகருமான சிவக்குமார் கடந்த சில நாட்களாக தனது வீட்டினிலியே தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் அவரது தரப்பிலிருந்து இன்னும் வெளியாகவில்லை.

Most Popular

Recent Comments