Home News Kollywood வெற்றிமாறனின் “வாடிவாசல்” வலம் வரும் வாகை சூடும் – கலைப்புலி எஸ். தாணு

வெற்றிமாறனின் “வாடிவாசல்” வலம் வரும் வாகை சூடும் – கலைப்புலி எஸ். தாணு

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர் என்றே சொல்லலாம். இவரது இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் என அனைத்துமே வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அழுத்தமான கதை மற்றும் கதாபாத்திரம், இந்த இரண்டிற்காகவுமே அனைவராலும் பாராட்டப்படகூடிய இயக்குனராக வலம் வருகிறார்.


Image

தற்போது வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. சூர்யாவை வைத்து வாடிவாசல், அதேசமயம் சூரியை வைத்து இன்னோரு படம், இதனை தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் தனுஷுடன் ஒரு படம் என வேற லெவல் வேகத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று சில விஷ கிருமிகள் கையை வைத்து கொண்டு சும்மா இல்லாமல் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்களின் பெயரில் ஒரு போலி டுவிட்டர் அக்கவுண்டரில் பொய்யான செய்தியை பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து தாணு தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்த ட்விட்டர் அக்கவுண்ட் என்னுடையது அல்ல, என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்புகிறார்கள். வாடிவாசல் பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம். எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் @VetriMaaran) இயக்கத்தில் சூர்யா (@Suriya_offl) நடிப்பில் ‘வாடிவாசல்” வலம் வரும் வாகை சூடும் எனப் பதிவிட்டுள்ளார்.