தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவர் படம் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் ப்ரஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. உடலை நன்றாக குறைத்து பழைய ஸ்லிம் சிம்புவாக டீசரில் தோன்ற, அவரது அயராத உழைப்பிற்காகவே ரசிகர்கள் அந்த டீசரை கொண்டாடி வருகின்றனர்.
ஈஸ்வரன் படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் பல சர்ச்சைகளுக்கு உள்ளான ‘மாநாடு’ படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு எடுத்த செல்பியை அவரது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் சிம்பு. புகைப்படத்தை வெளியிட்ட சில நிமிடங்களிலே இந்தியா ட்ரெண்ட் செய்து மாஸ் செய்கின்றனர் சிம்பு ரசிகர்கள். அவரது தோற்றம் அனைவராலும் பாராட்டப்பட்டது.