தளபதி விஜய் பெயரில் பலர் பல்வேறு குளறுபடிகளை சமீபகாலமாக செய்து வருவதால் விஜய் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மற்றும் விஜய் மக்கள் இயக்கம் தொடர்ந்து செய்யும் நலத்திட்ட உதவிகளை வெளியிட விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரில் அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனல் தொடங்கப்படவுள்ளது.
சமீபத்தில் நடிகர் விஜய் பெயரில் அவரது தந்தை எஸ்.ஏ.சி கட்சி தொடங்கியது சினிமா துறை மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கும் அந்த கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகர் விஜய் அறிவித்த நிலையில் அந்த கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்ட பத்மநாபன் என்னும் ராஜா மற்றும் ஷோபா ஆகியோர் பதவி விலகினார். இந்த நிகழ்வில் தளபதி விஜய் பக்கம் தான் நியாயம் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிகாரப்பூர்வமான யூ-டியூப் சேனலை விரைவில் தொடங்க உள்ளது. நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் அந்த சேனலின் மூலமாக உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை சென்றடையும் என விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.