V4UMEDIA
HomeNewsKollywoodசூப்பர்ஸ்டார் ரஜினியின் அரசியல் நிலை என்ன ??

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அரசியல் நிலை என்ன ??

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நாளை ( நவம்பர் 30ம் தேதி) சந்தித்து பேச இருக்கிறார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் காலை 9 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களும் ராகவேந்திரா மண்டபம் வர வேண்டும் என ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவால் ஏற்பட்ட மாற்றம், தமிழக அரசியல் நிலவரம், ரசிகர்கள் மனநிலை, நிர்வாகிகளின் கருத்து என பல்வேறு கருத்துகளை பல மாதங்களாக கலந்தோசித்து அது குறித்து மாவட்ட செயலாளர்கள் கருத்து கேட்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, அரசியலில் ரஜினிகாந்த் இறங்குவது பற்றி இறுதி முடிவு செய்ய உள்ளார் என கூறப்படுகிறது.

இதனை ரஜினி ரசிகர்கள் #RajinikanthPoliticalEntry என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். சூப்பர்ஸ்டார் ரஜினி என்ட்ரி குறித்து அறிவிப்பு வருமா இல்லையா என்பதை பொறுத்து இருந்து நாளை பார்ப்போம்.

Most Popular

Recent Comments