Home Review Nishabdham

Nishabdham

Review By :- v4u media

Release Date :- 02/10/2020

Movie Run Time :- 2.15 Hrs

Censor certificate :- U/A

Production :- Kona Film Corporation, People Media Factory

Director :- Hemant Madhukar

Music Director :- Girishh G.

Cast :- Madhavan Anushka Shetty Michael Madsen Anjali Subbaraju Shalini Pandey

கதைக்களம்:

பல ஆண்டுளாக பூட்டிக் கிடக்கும் வீடு ஒன்றில், பெய்ண்டிங் ஒன்றை எடுக்க செல்லும் அனுஷ்கா (சாக்ஷி) & மாதவன் (அந்தோணி). அங்கு செல்லும் இருவரில் மாதவன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார், அடுத்து என்ன யார் கொலையாளி? என்ன நடந்தது? என்ற இன்வஸ்டிகேஷனே மீதிக் கதை.

Nishabdham Movie Review and Rating

FC விமர்சனம்:

இப்படத்தின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பிற்கு முக்கிய காரணம் நீண்ட நாட்களுக்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம் என்பதுதான். அதேபோல், மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட மற்ற நடிகர்களும். இதைத்தவிர இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி மேலும் எதிர்ப்பார்ப்பை கூட்டியது. ஆனால், இதில் எதுவுமே படத்தில் எடுபடவில்லை. அனுஷ்கா, மாதவன் தங்கள் பாத்திரத்தை நேர்த்தியாக செய்திருந்தாலும் முழுமையாக அமையவில்லை. அதேபோல் அஞ்சலி, ஷாலினி பாண்டே.

Nishabdham Movie Review and Rating

இப்படத்தில் பாராட்டுக்குரிய ஒரே விஷயம் ஒளிப்பதிவு மட்டும்தான், அந்த அளவிற்கு அழகான, நேர்த்தியான ஒளிப்பதிவு. மற்றபடி பாடல்கள், பின்னணி இசை, எடிட்டிங் எதுவும் படத்திற்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை. கதையை பொறுத்தவரை புதிது என சொல்லமுடியாவிட்டாலும், நல்ல த்ரில்லர் அம்சங்கள் கொண்ட களம் தான்.  ஏகப்பட்ட பிளாஸ்பேக் காட்சிகள் பொறுமையை சோதிக்கிறது, நடிகர்களின் கதாப்பாத்திர வடிவமைப்பும், நடிப்புமே குறையாக அமைந்துள்ளது.