V4UMEDIA
HomeReviewLock Up Movie

Lock Up Movie

Review By :- v4u media

Release Date :- 14/08/2020

Movie Run Time :- 1.46 Hrs

Censor certificate :- U

Production :- Shvedh Group

Director :- SG Charles

Music Director :- Arrol Corelli

Cast :- Vaibhav Venkat Prabhu Poorna Vani Bhojan Easwari Rao Mime Gopi Poraali Dileepan

வெங்கட் பிரபு அண்ட் க்ரூப் என்று சொல்லும் அளவுக்கு ஒரு பெரிய வட்டாரமே உருவாகியுள்ளது நம் கோலிவுட்டில். அதில் ஒருவரான நிதின் சத்யா சில மாதங்களுக்கு முன் ஜெய் அவர்களை ஹீரோவாக்கி ஜருகண்டி’ படத்தை தயாரித்து இருந்தார். அந்த படத்திற்கு பிறகு ‘லாக்கப்’ படத்தை தயாரித்துள்ளார். கொரோனாவின் காரணத்தால் இப்படம் OTT தளத்தில் வெளியானது.

வைபவ், வெங்கட் பிரபு, வாணி போஜன், பூர்ணா, ஈஸ்வரி ராவ் முக்கியமான ரோலகளில் நடித்துள்ளனர். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு, இசை ஆரோலி கொரலி.

கதை – ஒரே ஸ்டேஷனில் கான்ஸ்டபிள் மற்றும் சப் இன்ஸ்பெக்டராக வைபவ், வெங்கட் பிரபு. வைபவ் காதலிக்கும் பெரிய இடத்து பெண்ணாக வாணி போஜன். வாணியின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக பூர்ணா.
ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மைம் கோபி கொலையாக, குற்றவாளியை பிடித்து விடுகிறார் வெங்கட் பிரபு. ஸ்டேஷனுக்கு ஒரு நாள் இன்ஸ்பெக்டராக பொறுப்பெடுக்கிறார் ஈஸ்வரி ராவ். இந்த கொலையில் உள்ள தப்புக்களை கண்டு பிடிக்கிறார்.

ப்ரோமோஷனுக்காக வெங்கட் பிரபு செய்ய நினைத்த செயல், வைபவ் சுதாரித்துக்கொண்டதால் வேறு ரூபம் எடுக்கிறது கதை. மைம் கோபியை கொன்றது யார், பூர்ணா சாவுக்கு யார் காரணம், ஈஸ்வரி ராவுக்கு துப்பு கொடுத்தது யார்… என ஒவ்வொரு முடிச்சியாக அவிழ்க்கப்பட முடிகிறது படம்.

குறைந்த பட்ஜெட் படமாக இருப்பினும், சிறந்த நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுத்த படக்குழுவுக்கு பாராட்டுக்கள். WHO DUNN IT ஜானரில் கதையை, திரைக்கதையை அமைத்த இயக்குனருக்கு ஸ்பெஷல் க்ளாப்ஸ். நெட் பிலிக்ஸ் / அமேசானில் விறு விறு வெப் சீரிஸின் ஒரு அத்தியாயம் பார்த்தது போன்ற நிறைவை தருகிறது.

வாணி போஜனுக்காக படத்தை பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். பின்னணி இசை பக்கபலம். தரமான துப்பறியும் திரில்லர் இப்படம்.

Most Popular

Recent Comments

Review By :- v4u media Release Date :- 14/08/2020 Movie Run Time :- 1.46 Hrs Censor certificate :- U Production :- Shvedh Group Director :- SG Charles Music Director :- Arrol Corelli Cast :- Vaibhav Venkat Prabhu Poorna Vani Bhojan Easwari Rao Mime Gopi...Lock Up Movie