Review By :- v4u media
Release Date :- 02/10/2020
Movie Run Time :- 2.57
Hrs Censor certificate :- U
Production :- KJR Studios
Director :- P. Virumaandi
Music Director :- Ghibran
Cast :- Vijay Sethupathi Aishwarya Rajesh Munishkanth Vela Ramamoorthy Rangaraj Pandey Bhavani Sre Poo Ram Abhishek Mohan Ram Namo Narayanan T. Siva
கதைக்களம்:
படத்தின் கதைக்களம் ராமநாதபுரம் மாவட்டம், தனது ஊரில் எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாய் குரல் கொடுக்கும் நாயகன் விஜய் சேதுபதி, அவரை கரம்பிடிக்கும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், இருவருக்குமான காதல் காட்சிகள் துவக்கத்தில் செல்ல, ஒருக்கட்டத்தில் விஜய் சேதுபதி துபாய்க்கு வேலைக்கு செல்ல, அதன்பிறகு ஊரில் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதற்கு பதில் கிடைத்ததா? என்கிற சுவாரஸ்யமான சம்பவங்களே மீதிக்கதை.
FC விமர்சனம்:
க/பெ ரணசிங்கம், Zeeplex OTT தளத்தில் Pay per View என்கிற முறையில் வெளியாகியுள்ளது. இப்படத்தை பொறுத்தவரை ஐஸ்வர்யா ராஜேஷ் அரியநாச்சியாக மொத்த பாராட்டுக்களையும் வாங்கி செல்கிறார், அந்த அளவிற்கு மிக நேர்த்தியான கதாப்பாத்திரம், அதற்கேற்ற சரியான நடிப்பு. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நெகிழவைக்கிறார். விஜய் சேதுபதி, எக்ஸ்டன்டட் கேமியோவாக படத்தில் வந்தாலும் அவருக்கே உரித்தான நடிப்பில் கவர்ந்து செல்கிறார். இவர்களை தவிர ஜிவி பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ, ‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட அனைவருமே நடிப்பை பொறுத்தவரை நிறைவு செய்துள்ளனர்.
ஜிப்ரானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமையாக அமைந்துள்ளது. அதேபோல், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைத்துள்ளது. எடிட்டிங்கை பொறுத்தவரை இன்னும் படத்தின் அளவை சற்று குறைத்திருக்கலாம் என்கிற ஓர் உணர்வு. தனது அறிமுக படத்திலேயே அழுத்தமான கதைக்களத்துடன், அதற்கேற்ற காதாப்பாத்திரங்கள், வசனங்கள் சேர்த்து முதல் பாலில் சிக்சர் அடித்துள்ளார் P. விருமாண்டி. படத்தில் வசனங்கள் பெரியளவு ஒர்க்அவுட்டாகியுள்ளது. படத்தில் குறையாக தெரிவது படத்தின் நீளமும் மற்றும் மெதுவாக செல்லும் திரைக்கதையும் தான், இதில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி, அவசியம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம் இந்த க/பெ ரணசிங்கம்…