நேற்று இன்று நாளை படம் புகழ் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்டோர் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்கள். பல தடங்கல்களுக்கு பின் மீண்டும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன் படத்திற்கு அயலான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு வித்தியாசமாக உள்ளது அதே சமயம் நன்றாக இருக்கிறது. கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் அவர்கள் மிக பிரமாண்டமான முறையில் படத்தை தயாரித்து வருகிறார். இது வரை வெளிவந்த சிவகார்த்திகேயன் படங்களில் இந்த படத்தின் பட்ஜெட் மிக அதிகம்.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு ஆகியோர் இடம்பெற்ற அயலான் படத்தின் படப்பிடிப்புப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகி வருகிறது. அதில் நால்வரும் காரின் உள்ளே அமர்ந்து இருக்கின்றனர்.