V4UMEDIA
HomeNewsBollywoodவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் தனுஷின் "அத்ரங்கி ரே" இறுதிக்கட்ட படப்பிடிப்பு !

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தனுஷின் “அத்ரங்கி ரே” இறுதிக்கட்ட படப்பிடிப்பு !

நடிகர் தனுஷ் நடித்து இந்தியில் 2013ல் வெளியான படம் ராஞ்சனா. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. இத்திரைப்படம் தான் நடிகர் தனுஷின் முதல் இந்தி திரைப்படமாகும். இந்த படத்தை ஆனந்த எல் ராய் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். தற்போது இதே கூட்டணியில் மற்றுமொரு படம் உருவாகிவுள்ளது.

‘அத்ரங்கி ரே’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷ் மற்றும் அக்‌ஷய்குமார் முன்னணி நடிகர்களாக நடிக்க ஆனந்த எல் ராய் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சாரா அலி கான் நாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து படப்பிடிப்பு பணிகள் மெல்ல தொடங்கி வரும் நிலையில், அக்டோபர் மாதத்தில் ‘அத்ரங்கி ரே’ படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இந்த படத்தில் தனுஷ் தமிழகத்தை சேர்ந்த இளைஞனாகவே நடித்துள்ளார். இதில் சில காட்சிகளை நம் தமிழ்நாட்டிலுள்ள காரைக்குடியில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளனர். மீண்டும் ஷூட்டிங்கை துவங்கியுள்ள படக்குழுவினர் டெல்லியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பினை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர் .

இது குறித்து நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படமொன்றை வெளியிட்டு “அத்ரங்கி ரே” படத்தின் இறுதி ஷடியூல் டெல்லியில்” என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த புகைப்படம் மிக வைரலாகி வருகிறது.

Most Popular

Recent Comments