V4UMEDIA
HomeNewsKollywoodபுஜ்ஜி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஹாரத்தி !

புஜ்ஜி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஹாரத்தி !

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிட்ஸா, ஜிகர்தாண்டா, இறைவி, பேட்ட என பல ஹிட் படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். பேட்ட படத்திற்கு பின் தனுஷை வைத்து “ஜெகமே தந்திரம்” படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தை வொய் நாட் ஸ்டுடியோஸ் சார்பாக சஷிகாந்த் மற்றும் ரிலயன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து மாபெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி லண்டன்-இல் படமாக்கப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் விநியோக உரிமையை TRIDENT ஆர்ட்ஸ் ரவீந்தரன் வாங்கியுள்ளார்.

பல மாதங்களாக படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.ஜகமே தந்திரம் படத்தில் இருந்து இரண்டாவது பாடல் புஜ்ஜி …தீபாவளியை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது . இந்த பாடலுக்கு பலர் கவர் சாங் உருவாக்கி வருகின்றனர் .இந்நிலையில் நடிகை ஹாரத்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் புஜ்ஜி பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர். ரசிகர்களுக்குக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Most Popular

Recent Comments