சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் ப்ரஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. உடலை நன்றாக குறைத்து பழைய ஸ்லிம் சிம்புவாக டீசரில் தோன்ற, அவரது அயராத உழைப்பிற்காகவே ரசிகர்கள் அந்த டீசரை கொண்டாடி வருகின்றனர்.
ஈஸ்வரன் படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் பல சர்ச்சைகளுக்கு உள்ளான ‘மாநாடு’ படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்புவிற்கு தற்போது புதிய பிரச்சனை ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது, ஈஸ்வரன் பட போஸ்டர் மற்றும் ட்ரைலரை உடனே நீக்குமாறு மத்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் ஈஸ்வரன் படத்தில் பாம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பாம்பு பயன்படுத்தப்பட்டது தொடர்பாக தடையில்லா சான்று முறைப்படி வாங்கவில்லை. எனவே, 7 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து வனத்துறைக்கு விளக்கமளிக்க ரப்பர் பாம்பு மற்றும் உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளை வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்று சுசீந்திரன் மற்றும் படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்டதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.