V4UMEDIA
HomeNewsKollywoodமுடிந்தது தயாரிப்பாளர் சங்க தேர்தல் !

முடிந்தது தயாரிப்பாளர் சங்க தேர்தல் !

பெரும் சர்ச்சை மற்றும் போராட்டத்திற்கு பின் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று (நவம்பர் 22) காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. தயாரிப்பாளர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் நடந்த இந்த தேர்தலில் மொத்த வாக்குகள் 1304. மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடியும் போது 1050 பேர் மட்டுமே வாக்களித்ததாக தகவல்கள் வெளி வந்துள்ளன.

சற்று முன் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்ததாகவும் இதனை அடுத்து வரும் திங்கட்கிழமை பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.மேலும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மொத்தம் 254 பேர் வாக்களிக்க வரவில்லை அவர்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், பாரதிராஜா, ஏவிஎம் சரவணன், எஸ்பிபி சரண் என பலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments