தமிழ்நாட்டில் கோயம்பதுரை சேர்ந்த அதுல்யா ரவி குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ் , குறும்படம் ஆகியவற்றில் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.
அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்த ” ஏமாளி ” படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது . அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய “கேப்மாரி” படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் அவர் நடித்து முடித்துள்ள என் பெயர் ஆனந்தன் படக்குழுவினர் அவர் மேல் புகார் அளித்துள்ளனர். அதில் எங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்த போது அவர் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடித்திருந்தார். ஆனால் இப்போது சில படங்களில் நடித்து முடித்துள்ளதால் தன்னை பெரிய கதாநாயகியாக நினைத்துக்கொண்டு எங்கள் படத்துக்கு ஒத்துழைப்புக் கொடுக்க மறுக்கிறார். ஒரு போட்டோஷாட் செய்ய ரூ.1 லட்சம் கேட்டுகிறார்’ என அந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். விசாரித்ததில் அதுல்யா ரவி கேரக்டர் பற்றி இப்படி தான் என பலரும் கூறுகின்றனர்.