V4UMEDIA
HomeNewsசமந்தாவுடன் டிவி ஷோவில் கலந்து கொண்ட பிரபல நடிகர் !

சமந்தாவுடன் டிவி ஷோவில் கலந்து கொண்ட பிரபல நடிகர் !

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை ஓரிரு நாட்கள் மட்டும் தொகுத்து வழங்கினார் என்பது நாம் அனைவரும் தெரிந்ததே. அவர் தொகுத்து வழங்கிய நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சாம்ஜாம் என்ற டிவி நிகழ்ச்சியை சமந்தா தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். வெறும் பத்து நாட்கள் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்காக அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது பலரையும் ஆச்சராயத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த நிலையில் முதல் வாரம் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்து அவரை சமந்தா பேட்டி எடுத்தார். இந்த நிகழ்ச்சியை மிக பிரபலமானதை அடுத்து இந்த வார நிகழ்ச்சியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொள்ள உள்ளார்.

சிரஞ்சீவியுடன் சமந்தா உரையாடும் நிழ்ச்சியின் படப்பிடிப்பு இன்று நடைபெற்றது. இதனை அடுத்து சிரஞ்சீவி படப்பிடிப்பு தளத்திற்கு வந்து மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் அவருக்கு தனது நன்றி என்றும் சமந்தா தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Most Popular

Recent Comments