பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார். இவருக்கு இந்தியா முழுவதும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிக விளம்பரங்களில் நடித்து அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களின் பட்டியலில் நம்பர்.1 இவர் தான். சமீபத்தில் ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்து வெளிவந்த “லஷ்மி” ஓடிடி-யில் மிகப்பெரிய ஹிட்டானது. இந்நிலையில் அக்ஷய் குமாரை சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் இணைத்து வீடியோ வெளியிட்ட யூட்யூபர் மீது நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அக்ஷய்குமார்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து பல்வேறு திரை பிரபலங்களையும் இந்த தற்கொலை சம்பவத்தோடு இணைத்து பலர் பேசி வந்தனர்.இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த யூட்யூபர் ஒருவர் தனது சேனலில் அக்ஷய்குமாருக்கும், சுஷாந்த் சிங் தற்கொலைக்கும் தொடர்பு உள்ளதாகவும், சுஷாந்த் சிங் காதலி ரியா வெளிநாடு தப்பி செல்ல அக்ஷய் குமார் உதவி செய்ததாகவும் வாய்க்கு வந்ததை எல்லாம் வீடியோவாக வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட யூட்யூபருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ள அக்ஷய்குமார். ஆதாரமற்ற யூட்யூபரின் அவதூறு வீடியோக்களால் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டு ரூ.500 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே யூட்யூபர் 3 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன் மட்டுமின்றி ரூ.500 கோடி நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.