ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்த நிலையில் மிகப்பெரிய கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் சிம்பு. சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் ப்ரஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. உடலை நன்றாக குறைத்து பழைய ஸ்லிம் சிம்புவாக டீசரில் தோன்ற, அவரது அயராத உழைப்பிற்காகவே ரசிகர்கள் அந்த டீசரை கொண்டாடி வருகின்றனர்.

ஈஸ்வரன் படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் பல சர்ச்சைகளுக்கு உள்ளான ‘மாநாடு’ படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்புவிற்கு தற்போது புதிய பிரச்சனை ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது, ஈஸ்வரன் பட போஸ்டர் மற்றும் ட்ரைலரை உடனே நீக்குமாறு மத்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் ஈஸ்வரன் படத்தில் பாம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பாம்பு பயன்படுத்தப்பட்டது தொடர்பாக தடையில்லா சான்று முறைப்படி வாங்கவில்லை. எனவே, 7 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.