V4UMEDIA
HomeNewsKollywoodஈஸ்வரனை தொடர்ந்து வரும் மாநாடு படத்தின் ப்ரஸ்ட் லுக் ! மாஸ் காட்டும் சிம்பு !

ஈஸ்வரனை தொடர்ந்து வரும் மாநாடு படத்தின் ப்ரஸ்ட் லுக் ! மாஸ் காட்டும் சிம்பு !

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் சிம்பு ஷூட்டிங் ஒழுங்காக வருவதில்லை என்று பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், வெளியான சில படங்களும் சரியாக மக்களிடம் ரீச் ஆகவில்லை. சிம்புவின் கெரியர் முடிந்து விட்டதா என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்த நிலையில் மிகப்பெரிய கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் சிம்பு.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் ப்ரஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. உடலை நன்றாக குறைத்து பழைய ஸ்லிம் சிம்புவாக டீசரில் தோன்ற, அவரது அயராத உழைப்பிற்காகவே ரசிகர்கள் அந்த டீசரை கொண்டாடி வருகின்றனர்.

ஈஸ்வரன் படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் பல சர்ச்சைகளுக்கு உள்ளான ‘மாநாடு’ படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Image

இந்நிலையில் அடுத்ததாக மாநாடு படத்தின் ப்ரஸ்ட் லுக் வெளியீடு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் சிம்பு. நவம்பர் 21ம் தேதி காலை 10.44க்கு மாநாடு படத்தின் ப்ரஸ்ட் லுக் வெளியாவதாக சிம்பு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து சிம்பு படங்களில் அப்டேட் வந்து கொண்டிருப்பதால் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Most Popular

Recent Comments