வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் தவசி புர்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் .தனக்கு சக நடிகர்கள் உதவ வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .
கிழக்குச் சீமையிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான நடிகர் தவசி பிரபலமானது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த கோடாங்கி கதாபாத்திரத்தின் மூலம் தான்.
இப்படத்தின் மூலம் புகழ் பெற்றதால் பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் அவருக்குத் திடீரென்று உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சாப்பிட முடியாமல் அவர் மிகவும் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத நிலைக்கு மாறியுள்ளார். அவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
இதற்காக மதுரையில் உள்ள சரவணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவசி தனக்குச் சக நடிகர்கள் உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் சரவணா மருத்துவமனையின் உரிமையாளரும, திமுக எம் எல் ஏ வுமான டாக்டர் சரவணன் தங்கள் மருத்துவமனையில் தவசிக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பொருளாதார ரீதியாக யாராவது உதவினால் அவரது குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். பிரபல நடிகர்கள் சூரி தவசிக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி அளித்து, அவருடன் மருத்துவமனையில் உள்ள உதவியாளருக்கு தேவையான 3 வேளையும் உணவு வழங்கப்படும் எனவு தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 25000 பண உதவி செய்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் பண உதவி செய்துள்ளார்.