V4UMEDIA
HomeNewsKollywoodமாபெரும் சாதனை படைத்த நடிகர் தனுஷின் "ரவுடி பேபி" பாடல்

மாபெரும் சாதனை படைத்த நடிகர் தனுஷின் “ரவுடி பேபி” பாடல்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2015ம் ஆண்டில் வெளிவந்த “மாரி” திரைப்படம் பட்டி தொட்டி என பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்தனர். 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் “மாரி 2 வெளிவந்தது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார். இந்த படம் நகைச்சுவை, காதல் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாக்கியதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தில் வரும் ரவுடி பேபி பாடல் மிக பெரிய ஹிட்டானது. பிரபு தேவா இப்பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். இந்நிலையில் ரவுடி பேபி பாடல் தமிழ் சினிமாவில் அதிக பார்வையாளர்களை கொண்ட ஒரே பாடல் என்று கூறலாம் மேலும் அந்த பாடல் தற்பொழுது யூடியூபில் 1 பில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில் “மாரி” படத்தின் நடிகரும், இப்பாடலைப் பாடியவருமான நடிகர் தனுஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் “என்ன ஒரு எதிர்ப்பாராத நிகழ்வு ! ரவுடி பேபி பாடல் 1 பில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதே நாளில் (நவம்பர் 17) கொலைவெறி பாடல் உருவாகி 9 ஆண்டுகளாகிறது. ரவுடி பேபி பாடல் தான் தென்னிந்தியாவில் 1 பில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற முதல் பாடல். ரசிகர்களுக்கு என் இதயத்திலிருந்து நன்றியைத் தெரிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “இது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. ரவுடி பேபி பாடல் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்து 1 பில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. எல்லோருக்கும் நன்றி” எனத் கூறியுள்ளார்

Most Popular

Recent Comments