V4UMEDIA
HomeNewsKollywoodபிக்பாஸ் புகழ் "லாஸ்லியா" தந்தை காலமானார் !

பிக்பாஸ் புகழ் “லாஸ்லியா” தந்தை காலமானார் !

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் படம் “ஃப்ரெண்ட்ஷிப்” . அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் “லாஸ்லியா” நடிக்கிறார். லாஸ்லியாவிற்கு இது தான் முதல் படம்.

ஃப்ரெண்ட்ஷிப் படத்தினை தொடர்ந்து புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் லாஸ்லியா. தில்லி பாபுவின் ஆக்ஸ்ஸ் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தனது அடுத்தப் படத்திற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. உறுமீன், மரகத நாணயம், ராட்சசன் என பல தரமான வெற்றி திரைப்படங்களைத் தயாரித்துள்ள தில்லி பாபுவின் அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ளார் லாஸ்லியா.


கடந்த சீசனில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பிறகுதான் நிகழ்ச்சியில் பெரும் திருப்பம் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் தனது மகளை கண்டித்தது மட்டுமன்றி தனது மகனை காதலிக்கும் கவினையும் நாசூக்காக அவரது தவறை எடுத்துக் கூறியது ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்ததாக பலர் கருத்து கூறினர்

இந்த நிலையில் நேற்று லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென காலமானதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. லாஸ்லியாவும் இதனை உறுதி செய்துள்ளார்

Most Popular

Recent Comments