தமிழ் சினிமாவின் தரமான படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவி குமார் தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் என பல படங்களை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்தவர் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் சிவி குமார்.
கடந்த சில ஆண்டுகளாக அவர் தயாரிப்பது மட்டுமின்றி இயக்கத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாயவன் மற்றும் கெங்ஸ் அப் மெட்ராஸ் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது அவர் ஒரு வரலாற்று திரைப்படத்தை இயக்க உள்ளார்.
அந்த படத்துக்கு கொற்றவை என தலைப்பு வைக்கப்பட்டு தீபாவளியை ஒட்டி போஸ்டரும் வெளியானது.
இந்த படத்துக்கு எழுத்தாளர் தமிழ்மகன் கதை மற்றும் வசனம் எழுதுகிறார். விரைவில் நடிகர் நடிகைகளின் விவரம் வெளியாகும்.