தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். அவருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.
அவர் தற்போது, அண்ணாத்த படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். அவருடன் கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட நடிகைகளும் நடித்து வந்த நிலையில் கொரோனா கால ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று தீபாவளி என்பதால் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் காலையில், அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு முன் நின்று அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.அப்போது அவரும் கை அசைத்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், மனைவி லதா ரஜினிகாந்த், மற்றும் மருமகன் பேரக்குழந்தை ஆகியோருடன் இணைந்து தீபாவளியை பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்.இதுகுறித்த புகைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.