லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு இப்படத்தின் ரிலீஸ் திரையரங்கில் மிக பிரமாண்டமான முறையில் இருக்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட்டி ஸ்டோரி” பட்டி தொட்டி வரை பெரிய ரீச்.
தளபதி விஜய் படம் இல்லாத தீபாவளியா ?? ஆம் தளபதி விஜய் யின் மாஸ்டர் டீஸர் தீபாவளி நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர். தளபதியை மிக அழகாக காட்டியுள்ளார் லோகேஷ். சண்டை காட்சிகளில் வழக்கம் போல பட்டைய கிளப்பியுள்ளார் தளபதி விஜய்.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் முழுவதும் உள்ள திரையரங்கில் மாஸ்டர் டீஸர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டீஸர் வெளியான சில நிமிடங்களிலே பல சாதனைகள் படைத்துள்ளது மாஸ்டர் டீஸர்.
இந்நிலையில் மாஸ்டர் டீசர் வெளியான 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதாகவும், 1.6 மில்லியன் லைக்ஸ்களைப் பெற்றிருப்பதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக லைக்ஸ்கலைப் பெற்ற டீசர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.