Home News Kollywood சூரரைப் போற்று படம் எப்படி இருக்கு ? – கேப்டன் கோபிநாத்தின் விமர்சனம் !

சூரரைப் போற்று படம் எப்படி இருக்கு ? – கேப்டன் கோபிநாத்தின் விமர்சனம் !

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரை போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் அமேசான் பிரைமில் நேரடியாக நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறான சிம்ப்ளி ப்ளை (தமிழில் வானமே எல்லை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கேப்டன் கோபிநாத் அவர்கள் இந்த படம் குறித்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ‘நேற்று இரவுதான் படத்தைப் பார்த்தேன். சில இடங்களில் சிரித்தேன். சில குடும்பக் காட்சிகளில் என்னை மறந்து அழுதேன். என் மனைவி பார்கவி கதாபாத்திரத்தை அபர்னா பாலமுரளி மிக சிறப்பாக நடித்திருந்தார். வளர துடிக்கும் தொழில்முனைவோரின் கதாபாத்திரத்தை சூர்யா மிக சிறப்பாக நடித்திருந்தார். திரைப்படம் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. என் நூலின் நோக்கத்தை படம் சரியாக பிரதிபலித்துள்ளது. சுதா கொங்கராவுக்கு சல்யூட்’ என கூறியுள்ளார்.