Home News Kollywood விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடிக்கும் 14 வது படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கிறார் .இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க  Dr . தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.  இசை – நிவாஸ்  கே பிரசன்னா.

Image

கொரோனா வைரஸால் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையால் ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு சில நிபந்தனைகளுடன் ஆரம்பித்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.