V4UMEDIA
HomeNewsKollywoodஅவர் தான் உண்மையான ஹீரோ ! வைரலாகும் பிரபல நடிகையின் செல்ஃபி !

அவர் தான் உண்மையான ஹீரோ ! வைரலாகும் பிரபல நடிகையின் செல்ஃபி !

நடிகை கனிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். அஜித்தின் வரலாறு, மாதவனின் எதிரி என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.​

சென்னையில் நடிகை கனிகா வசித்து வரும் வீட்டின் அருகே துப்புரவு பணி செய்வது வருபவர் ராமு. இவர் சில வருடங்களாக அதே இடத்தில் அமைதியாக வேலை செய்துகொண்டு வருகிறார்.

நேற்று காலை அவரைப் பார்த்த கனிகா வணக்கம் சொல்லியுள்ளார். அதைப் பார்த்ததும் ராமு கண் கலங்கியுள்ளார். தனக்கு யாரும் வணக்கம் வைக்காத போது நீங்கள் தான் முதன்முதலாக வணக்கம் வைத்துள்ளீர்கள் என்று கூறி ஒரு புகைப்படம் எடுத்து கொள்ளலாமா என கேட்டுள்ளார்.கனிகா அவருடம் செல்ஃபி எடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததுடன் அவரைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி, அவரை ரியல் ஹீரோ எனத் தெரிவித்துப் புகழாரம் சூட்டியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Most Popular

Recent Comments