V4UMEDIA
HomeNewsBollywoodடிஸ்னி ஹாட் ஸ்டாரில் மாபெரும் சாதனை படைத்த "லஷ்மி" திரைப்படம் !

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் மாபெரும் சாதனை படைத்த “லஷ்மி” திரைப்படம் !

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சில படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாகின்றன. தமிழில் ’பொன்மகள் வந்தாள்’ ’பெண்குயின்’ ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் பாலிவுட் உட்பட பல மொழிகளிலும் பல முன்னணி நடிகர் நடிகைகளின் திரைப்படங்கள் ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆகி வருகிறது.

Image

தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி வந்த ’லட்சுமி பாம்’ திரைப்படம் நவம்பர் 9 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார்ல் வெளியாகவுள்ளது. ஓடிடியில் வெளியானாலும் இப்படம்
அன்றைய தினம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,ஐக்கிய அமீரகத்திலுள்ள திரையரங்கிலும் வெளியாகும் எனக் கூறியுள்ளனர்.

அக்ஷய்குமார், கைரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழில் வெளியான ’காஞ்சனா’ திரை படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் நேற்று இரவு வெளியாகி பாலிவுட் ரசிகர்களை மிரட்டி எடுத்தது. இந்த நிலையில் இதுவரை ”டிஸ்னிஹாட் ஸ்டார்” ஓடிடி தளத்தில் வெளியான படங்களிலேயே மிகப் பெரிய ஓபனிங் செய்த படம் மற்றும் மாபெரும் வசூல் சாதனை பெற்ற படம் என்ற சாதனையை பாலிவுட்டில் ’லட்சுமி’ படம் படைத்து மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது. படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Most Popular

Recent Comments