V4UMEDIA
HomeNewsKollywoodஅமேசான் பிரைமில் நாளை வெளியாகும் சூரரைப் போற்று !

அமேசான் பிரைமில் நாளை வெளியாகும் சூரரைப் போற்று !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது “சூரரை போற்று”. இந்த படம் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சுதா கோங்குரா இயக்கியுள்ளார். சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரிப் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 2டி என்டேர்டைன்மெண்ட் சார்பில் ராஜசேகர பாண்டியன் தயாரித்துள்ளார். கொரோனா ஊரடங்கினால் திரையரங்கில் ரிலீஸ் செய்யாமல் ஓடிடி ல் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார் சூர்யா. உலகம் முழுவதும் நாளை (நவம்பர் 12) அமேசான் ப்ரைம் இல் வெளியாகவுள்ளது.



சூரரைப் போற்று படத்திலிருந்து ஏற்கனவே பாடல்கள், “மேக்கிங் ஆஃப் மாறா” காணொளியின் இரண்டாம் பாகம், டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

உண்மை சம்பவத்தை மைய கருவாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா பல கெட்-அப் களில் ரசிகர்களை மகிழ்விக்க மிக கடினமாக உழைத்துள்ளார். சூரரை போற்று படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Most Popular

Recent Comments