யோகிபாபு மற்றும் அஞ்சலி கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் அமேசான் ப்ரைமில் அனுஷ்கா மற்றும் மாதவன் நடிப்பில் உருவான “சைலன்ஸ்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அஞ்சலி தற்போது நடிகர் யோகிபாபுவுடன் கூட்டணி அமைக்கவுள்ளார். தற்போது இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘பூச்சாண்டி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இப்படத்தை கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார். அஞ்சலி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அஞ்சலி இந்தப் படத்தில் கூடைப்பந்து வீரராகவும், பயிற்சியாளராகவும் நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் அஞ்சலியும் யோகி பாபுவும் பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அஞ்சலி கதை கேட்டதுமே குஷி ஆகி விட்டார். அஞ்சலி எப்போதும் ஒரு படத்தை இறுதி செய்ய நேரம் எடுப்பார். ஆனால் இப்படத்தின் கதை அவருக்குப் பிடித்துவிட்டது.” என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
