V4UMEDIA
HomeNewsதெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கும் கொரோனா தொற்று உறுதி : ரசிகர்கள் அதிர்ச்சி..!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கும் கொரோனா தொற்று உறுதி : ரசிகர்கள் அதிர்ச்சி..!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும், பாமர மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த தொற்றின் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

சமீபத்தில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, அர்ஜுன் கபூர், மலைகா அரோரா, ஜெனிலியா மற்றும் ராஜமெளலி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “ஆச்சார்யா படத்திற்கான படப்பிடிப்பின் போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாத நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த 5 தினங்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

Most Popular

Recent Comments