சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தான் இயக்க விருப்பப்படுவதாகவும், அதில் ரஜினிகாந்த் கேரக்டரில் நடிக்க தனுஷ் மட்டுமே நடிக்க பொருத்தமாக இருப்பார் என தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் லிங்குசாமி கூறியிருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லிங்குசாமி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக நான் முயற்சித்து வருகிறேன். இந்த படத்தில் ரஜினி கேரக்டரில் தனுஷ் நடித்தால் மட்டுமே மிக கச்சிதமாக இருக்கும் என நான் முடிவு செய்துள்ளேன். இதுகுறித்து ரஜினிகாந்த் மற்றும் தனுஷுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் என கூறியுள்ளார்
ரஜினிகாந்த் தனது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க ஒப்புதல் தருவாரா ? அப்படியே ஒப்புதல் தந்தாலும் தனுஷ் நடிப்பதற்கு அவர் சம்மதிப்பாரா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.