தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தளபதி விஜய். தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அரசியலுக்கு வரவழைக்க அவரது ரசிகர்கள் அவ்வப்போது எதாவது போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் விஜயயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், நானே ஒரு அமைப்பில் இருக்கும் போது நான் எதற்கு பாஜகவில் இணையவேண்டும் ? நேரம் வரும் போது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக்குவேன் என கூறினார்.
இந்நிலையில் தளபதி விஜய் கட்சி தொடங்குவதாக தகவல்கள் பரவியது. இன்று விஜய், அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்க வேண்டி கட்சிப் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகத் தகவல் அனைத்து மீடியாக்களிலும் வெளியானது.
இந்நிலையில் தளபதி விஜய் யின் பி.ஆர் ரியாஸ் கே அஹமத் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய் * கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய் என்ற செய்தி தவறானது The news spreading about ” #ThalapathyVijay political party registered today ” is untrue என விளக்கமளித்துள்ளார்.
மேலும் இதன் மூலம் எனது தந்தை அரசியல் தொடர்பாக மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னைக் கட்டுப்படுத்தாது என்றும், என் ரசிகர்கள் என்பதற்காக
என் தந்தை தொடங்கியுள்ள கட்சியில் சேர வேண்டாம் என்றும், அவர் அரம்பித்துள்ள கட்சிக்கும் நமது இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
எனது பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி விளம்பரத்தில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.