இயக்குனர் விருமாண்டி அவர்கள் இயக்குநர் திரு. செல்வா அவர்களிடம் துணை,இணை இயக்குநராக பல திரைப்படங்களில் பணியாற்றினர். தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் நடிப்பில் KJR studios கோட்டப்பாடி J.ராஜேஷ் சார் அவர்களின் தயாரிப்பில் க/பெ ரணசிங்கம் எனும் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளேன். இத்திரைப்படம் கடந்த மாதம் DTH தளத்தில் ZEE PLEX லும் OTT தளத்தில் ZEE5 லும் வெளியாகி உலகமெங்கும் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

தமிழில் மாபெரும் வெற்றியை தந்த ரசிகர்களுக்கும் மக்களிடம் கொண்டு சேர்த்த அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை கடந்த மாதம் தெரிவித்தார்.
க/பெ ரணசிங்கம் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். அதன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தயாரிப்பாளர் KJ ராஜேஷ் அத்திரைப்பட இயக்குனர் பெ.விருமாண்டிக்கு Maruti XL காரைப் பரிசாக அளித்துள்ளார்.