தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் சதீஷ். இவர் நாடக மேடை கலைஞராக இருந்து பின் தனது அயராது உழைப்பால் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துள்ளார்.
தளபதி விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்துள்ள நடிகர் சதீஷுக்கும் சிந்து என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சிந்து கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமானார்.
.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 04) சதீஷ், சிந்து தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் இரண்டு பேரும் நலம் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு பெண்குழந்தை பிறந்திருப்பதாகவும், ரசிகர்களின் வாழ்த்தை வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்து சதீஷின் குழந்தைக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்